தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

Supreme Court of India
By Irumporai Apr 11, 2023 04:42 AM GMT
Report

தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் பேரணி நடத்துவது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை மீது இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

 ஆர்எஸ்எஸ் பேரணி

தமிழகத்தில் ஆர்.எஸ் .எஸ் பேரணி நடத்துவதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்த பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர் எஸ் எஸ் வழக்கு தொடர்ந்தது, இதில் நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர்நீதி மன்றம் ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு | Supreme Court Holding Of An Rss Rally

 உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு

சென்னை உயர்நீதிமன்ற தீர்பை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பாகப் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது