சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான் : ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தமிழக அரசு வகுத்த அவசர சட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு விசாரணையானது, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்றது இந்த வழக்கின் இறுதி வாதங்கள் அனைத்தும் கடந்த டிசம்பர் மாதமே நிறைவுற்று, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு மே 18 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தடைஇல்லை
ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசனம் தீர்ப்பு வழங்கியுள்ளது, மேலும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் செல்லுபடி ஆகும் என்றும் ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரங்களில் ஒரு பகுதி என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது
மேலும் ஜல்லிக்கட்டு சட்ட திருத்தம் எந்த விதிமுறைகளையும் மீறும் வகையில் இல்லை என கூறிய நீதிமன்றம்
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசியல் சாசன பிரிவு 14 மற்றும் 21 ஆகிய அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.