அதானி விவகாரம் : மத்திய அரசு குழுவை மறுத்த உச்சநீதிமன்றம்
அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய மத்திய அரசு பரிந்துரைத்த நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
அதானி விவகாரம்
அமெரிக்க ஹிண்டன்பர்க் நிறுவனமானது கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் ,பங்கு சந்தையில் முறைகேடாக செயல்பட்டு முதலீட்டுகளை பெறுகிறார் என்பது பல குற்றம் சாட்டியது . இதனை அதானி குழுமம் மறுத்தாலும் ஹிண்டன்பர்க் அறிக்கை பங்கு சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
அதானி விவகாரம்
தானி பங்குகள் மட்டுமில்லாமல் , இந்திய பங்குசந்தையே பாதிப்பை சந்தித்தது. இதனை தொடர்ந்து தான், உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. அதாவது இது இரு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான விவகாரம் தான் என்றாலும், இதனால் அதிகளவில் சிறிய முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது

இந்நிலையில், அதானி குழுமம் போன்ற மற்ற பங்குச்சந்தை விவகாரங்களை கண்காணிக்க ஓர் நிபுணர் குழுவை நியமிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனை அடுத்து, இன்று மத்திய அரசு அதானி குழுமம் விவகாரங்கள் குறித்து விசாரணை செய்ய குறிப்பிட்ட நபர்கள் அடங்கிய நிபுணர் குழு விவரங்களை சீலிடப்பட்ட கவரில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழங்கியது.
உச்ச நீதிமன்றம் வெறுப்பு
இதனை கண்டு , விசாரணை என்பது வெளிப்படையாக நடைபெற வேண்டும். அதே போல விசாரணை செய்பவர்களின் விவரங்களும் அனைவருக்கும் வெளிப்படையாக தெரியவேண்டும். அப்போது தான் எதிர்தரப்பினர் இதில் ஆட்சேபனை தெரிவிக்கிறார்களா என்பது தெரியவரும் என கூறி மத்திய அரசு அளித்த பரிந்துரை குழுவினர் பெயரை உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், தாங்களே நிபுணர் குழுவை தேர்வு செய்ய போவதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.