ராமர் பாலம் தொடர்பான மனுக்களை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

Supreme Court of India
By Thahir Jan 19, 2023 12:45 PM GMT
Report

ராமர் பாலத்ததை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம் 

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையின் போது ராமர் பாலம் விவகாரத்தை மத்திய அரசு கவனமாக பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் சுப்பிரமணி சுவாமி தரப்பில் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்போம் என மத்திய அரசு உறுதியளித்ததாகவும், தற்போது இழுத்தடிப்பதாகவும் குறிப்பிட்டார்.

supreme-court-has-closed-the-petitions-ram-bridge

மேலும் இது தொடர்பாக எநத அமைச்சரையோ, அதிகாரியையோ சந்திக்க விரும்பவில்லை எனக் கூறினார். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ராமர் பாலம் விவகாரம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராமர் பாலம் தொடர்பான இடையீட்டு மனுக்களை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

அதே வேளையில், இந்த விவகாரத்தில் மனுதாரர் ஏதேனும் நிவாரணம் கோர விரும்பினால் நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம் என அறிவுறுத்தினர்.