”நாங்க பாத்துட்டு சும்மா இருக்க மாட்டோம்” - மோடி அரசுக்கு செக் வைத்த சுப்ரீம்கோர்ட்

Corona Vaccine Modi Supreme Court
By mohanelango Jun 04, 2021 12:16 PM GMT
Report

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவத்தை நிகழ்த்திவிட்டது. இரண்டாம் அலையில் பாதிப்புகள் மெல்ல குறைந்தாலும் தடுப்பூசி செலுத்தும் வேகம் என்பது மிகவும் மந்தமாகவே இருந்து வருகிறது.

இதற்கு ஒன்றிய அரசு போதிய அளவில் தடுப்பூசிகளை முன்கூட்டியே ஆர்டர் செய்தாதது தான் காரணமாகச் சொல்லப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் தடுப்பூசி செலுத்துவதற்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

தற்போது இந்த ரூ.35,000 என்ன ஆனது என பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி கொள்கை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு செக் வைத்துள்ளது.