நளினியை விடுதலை செய்வது குறித்து உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம் - தமிழக அரசு
நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்கக்கோரும் விவகாரத்தில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
நீதிமன்றமே முடிவெடுக்கலாம் - தமிழக அரசு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை கைதிகளாக நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஏழு பேர் விடுதலையில் குடியரசு தலைவர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாகவும், பேரறிவாளனை ஏற்கனவே நீதிமன்றமே விடுவித்ததை போலவே இந்த விவகாரத்திலும் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் எனவும் பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்தது போல் தங்களையும் விடுவிக்க வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.