டெல்லியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் தடை..!

Delhi SupremeCourt Bans Removal Occupiers
By Thahir Apr 20, 2022 05:59 AM GMT
Report

டெல்லியில் கலவரம் நடந்த ஜகாங்கீர்புரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டெல்லி ஜகாங்கீர்புரி பகுதியில் உள்ள கடைகள்,வீடுகள்,தெரு ஓர கடைகள் இன்று காலை அகற்றப்பட்டன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த அதிகாரிகள் புல்டோசர் வாகனத்தின் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இதனிடையே நேற்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது அதில் நாடு முழுவதும் புல்டோசர் கொண்டு கலவரத்தில் ஈடுபட கூடியவர்களின் சொத்துக்கள் இடித்து தரைமட்டமாக்கப்படுகிறது.

அதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.ஜகாங்கீர் பகுதியிலும் அத்தைகைய நடவடிக்கை எடுக்கப்படலாம் என அந்த மனுத்தாக்கலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று காலை ஆக்கிரமிப்பு பணிகள் தொடங்கிய உடன் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் உள்ளிட்டோர் உச்சநீதிமன்ற தலைமை அமர்வில் கோரிக்கை வைத்தார்கள்.

அப்போது தலைமை நீதிபதி “ஸ்டேடஸ் கோ” அதாவது தற்போது என்ன நிலைமையோ அதை அப்படியோ நிறுத்திவிடுங்கள்.

ஆக்கிரமிப்பு பணிகளை உடனடியாக நிறுத்திவிட வேண்டும் என கூறி நாளை இந்த வழக்கு விசாரிக்கப்படும் என கூறி உத்தரவிட்டனர்.

இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் ஏதேனும் ஒரு மதத்தினரை குறி வைத்து நடத்தப்படுகிறதா?ஆனால் உண்மையில் ஆக்கிரமிப்பு பணிகள் சட்டபூர்வமாக செய்யப்படுகிறதானா? நாளைய விசாரணையில் தெரிய வரும்.