அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை விதிப்பு - உச்சநீதிமன்றம்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் தசரா விடுமுறைக்கு பின்னர் இந்த வழக்கையும் நிலுவையில் உள்ள வழக்கையும் விசாரிப்பதாக தெரிவித்த போது,
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதால் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் இபிஎஸ் தரப்பிடம் இப்போது நீங்கள் தானே பொறுப்பில் இருக்கிறீர்கள் தேர்தலை நடத்த என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பினர். பின்னர் இரு தரப்பு வாதங்களும் நடைபெற்றது.
பின்னர் நீதிபதிகள் இடைக்காலமாக அதிமுகவில் தேர்தல் நடத்த தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து இடைக்காலமாக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிப்பதாகவும் தசரா விடுமுறைக்கு பின்னர் விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.