எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு : ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

By Irumporai May 02, 2022 09:13 AM GMT
Report

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழக்கின் விவரங்களை எஸ்பி வேலுமணியிடம் வழங்குவோம் எனவும் தமிழக அரு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, முதற்கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி எஸ்.பி.வேலுமணி மனுதாக்கல் செய்திருந்தார். முன்னதாக வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 10 வாரத்தில் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.