நாங்க இந்தியாவுக்கு மருத்து பொருட்கள் தருகிறோம் - கரம் கொடுக்கும் தென் கொரியா

covid19 india medical indiasouthkorea
By Irumporai Apr 28, 2021 10:11 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவிற்கு தேவையான மருத்துவ பொருட்கள் தந்து ஒத்துழைப்போம் என தென் கொரியா தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ பல்வேறு நாடுகளும் முன்வந்துள்ளன.

இந்tத நிலையில் தென் கொரியா தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

கொரோனா தொற்றை எதிர்கொண்டு உயிர்களை காப்பாற்றும் வகையில் இந்தியாவுக்கு தேவையான மருத்துவ பொருள்களை தென் கொரியா அரசு வழங்க உள்ளது.

ஆக்ஸிஜன் போன்ற தேவைப்படும் பொருள்கள் குறித்து இந்திய அரசிடம் ஆலோசனை நடத்தி வருகின்றோம்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு எங்களது அரசு தொடர்ந்து ஒத்துழைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.