"ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது" - நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பொங்கல் வாழ்த்து

தைத் திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாரும் இந்தியாவின் முன்னணி நடிகருமான ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில்,

“அனைவருக்கும் வணக்கம். ஒரு கஷ்டமான, ஒரு ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு.

இதுலேருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பாக கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது.

அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் டுவிட்டர் மட்டுமின்றி, அவரது மகள் ஐஸ்வர்யா நடத்தி வரும் ஹூட் செயலியிலும் தனது ரசிகர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்