‘’சூப்பர் லே ‘’ அரசு விரைவு பேருந்தில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி

tamilnadu govtbus womanbedfacility
By Irumporai Apr 01, 2022 04:18 AM GMT
Report

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கீடு செய்ய போக்குவரத்து துறை உத்தரவு. தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு படுக்கை எண்1LB மற்றும் 4LB ஒதுக்கீடு செய்ய தமிழக போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பின் படி  மேலாண் இயக்குநர் உத்தரவின்படி போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் (படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்து, இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் / குளிர்சாதனமில்லா பேருந்துகள்) பெண்களுக்கு தனியாக படுக்கை எண்,1 LB மற்றும் 4 LB ஒதுக்கீடு செய்து இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

‘’சூப்பர் லே  ‘’ அரசு விரைவு பேருந்தில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி | Superseparate Bed Facility For Women Gvt Bus

எனவே, இனி வரும் காலங்களில் மேற்படி படுக்கையில் முன்பதிவு செய்த பெண் பயணிகளுக்கு அதனை ஒதுக்கீடு செய்து தரவும் மற்றும் பேருந்து புறப்படும் வரை மேற்கூறிய படுக்கையில் பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாத பட்சத்தில் அதனை பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து தர மேற்கூறிய பேருந்துகளில் பணியாற்றும் நடத்துநர்கள் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிதிக்கப்பட்டுள்ளது.