அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு - 10 பேர் உயிரிழப்பு..!

United States of America
By Thahir May 15, 2022 12:10 AM GMT
Report

அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும் ப்ரெண்ட்லி சூப்பர் மார்க்கெட் கட்டிடத்திற்குள் நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

யார் அந்த நபர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.அந்த நபர் துப்பாக்கிச் சூட்டை நேரலையில் ஒளிபரப்பியிருக்கலாம் என்றும், அவர் ஆன்லைனில் ஒரு அறிக்கையை வெளியிட்டாரா என்பதை ஆராய்ந்து வருவதாகவும் புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள் என்று அங்குள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

விசாரணை அதன் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், அதிகாரிகள் இன்னும் தெளிவான நோக்கத்தைக் கண்டறியவில்லை என்றும், ஆனால் துப்பாக்கிச் சூடு இனவெறி தூண்டப்பட்டதா என்பதை ஆராய்ந்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.