இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி - நடுங்கும் நாடுகள்...ஏன் தெரியுமா?

Weather
By Thahir Feb 21, 2023 05:05 AM GMT
Report

இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியுள்ளது என்று சர்வதேச விண்வெளி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தும் வெப்பமண்டல சூறாவளி 

இந்த வெப்பமண்டல சூறாவளி இந்திய பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கிச் செல்கிறது. புயல் இன்று மொரிஷியசை தாக்கும் எனவும்,

சூறாவளியால் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மொரிஷியஸ் நேரடி அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Super tropical cyclone in the Indian Ocean

சூறாவளி புயல் ஒரு பயங்கரமான சூறாவளியாக தாக்கும், கனமழை வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்கா, மலாவி, ஜாம்பியா, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் உச்சக்கட்ட தயார் நிலையில் உள்ளது.

புயலின் கண் பகுதிய ஆக்ரோஷமாக நகர்ந்து செல்லும் காட்சியை சர்வதேச விண்வெளி மையம் வீடியோ பிடித்திருக்கிறது. ஆக்ரோஷமாக சூறாவளி புயல் நகரும் காட்சி வேகமாக பரவி வருகிறது.