சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இனி anchor பிரியங்கா இல்லை - சிவாங்கி தான்! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகம்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக இனி குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி தான் தொகுப்பாளராக உள்ளதாக அவரே தகவல் தெரிவித்துள்ளார்.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். கொரோனா காலத்தில் சிறியவர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது, நோய் தொற்று பிரச்சனையால் அப்படியே நிறுத்தப்பட்டது.

தற்போது பெரியவர்களுக்கான புதிய சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, அதுவும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த சீசனில் ஜெயிக்கப்போவது யார் என்ற கருத்துக் கணிப்புகளும் நிறைய நடந்து வருகிறது.
இந்த நிலையில் தான் பிக்பாஸ் 5வது சீசனில் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே கலந்துகொள்கிறார் என செய்தி வந்தது. அதனை உறுதிப்படுத்துவது போல் புதிய Start Music நிகழ்ச்சியை மாகாபா தொகுத்து வழங்குகிறார்.

இப்போது இதற்கு மேல் வரப்போகும் சில சூப்பர் சிங்கர் எபிசோடுகளை குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி பிரியங்காவிற்கு பதிலாக தொகுத்து வழங்க இருக்கிறாராம்.
இந்த தகவல் குறித்த ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதனை உறுதிப்படுத்தியுள்ளார் சிவாங்கி.

கிராம சேவகரிடம் பட்டியல் கொடுத்த தேசிய மக்கள் சக்தியினர் : மானிப்பாய் பிரதேச சபையில் அமளி துமளி! IBC Tamil
Viral Video: தண்ணீருக்குள் இறங்கும் முன்னே அரங்கேறிய மீன் வேட்டை... நாரையின் அசத்தல் காட்சி Manithan