பிரியங்கா இனி சூப்பர் சிங்கரில் இல்லை - ஆங்கராக அந்த சீரியல் ஹீரோயின்
சூப்பர் சிங்கரில் பிரியங்காவிற்கு பதிலாக சீரியல் நடிகை ஹோஸ்ட் ஆக வந்துள்ளார்.
சூப்பர் சிங்கர்
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று சூப்பர் சிங்கர். இதில் மா.க.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டேதான் தொகுப்பாளர்களாக இருந்தனர்.
இதில் பிரியங்கா டிஜே-வான வசி சச்சி என்பவரை கரம் பிடித்துள்ளார். இந்நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வேறு ஒருவர் புது ஹோஸ்டாக மாறியிருக்கிறார். சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியானது.
ஆங்கராக சீரியல் நடிகை
இதில் சீரியல் நடிகை லக்ஷ்மி பிரியா புது ஹோஸ்டாக வந்துள்ளார். மகாநதி சீரியலின் கதாநாயகி லக்ஷ்மி பிரியா. இவரை ஆங்கராக பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் பிரியங்காவிற்கு சமீபத்தில்தான் திருமணம் முடிந்திருப்பதால், அவர் விடுமுறையில் இருக்கிறார். எனவே இவரை மாற்றியுள்ளனர். அவர் மீண்டும் வந்து இந்த நிகழ்ச்சியை மாகபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கலாம் என கூறப்படுகிறது.