சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிளம்பிய பிரச்சனை- வெளியேறிய நடுவர்! என்ன நடந்தது?
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இனி கலந்து கொள்ள மாட்டேன் என நடுவர் பென்னி தயால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று. தற்போது சூப்பர் சிங்கர் பெரியவர்களுக்கான 8வது சீசன் நடந்து வருகிறது.
வழக்கம் போல் பிரியங்கா மற்றும் மாகாபா தான் தொகுப்பாளர்களாக இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் ஒரு ஜாலியான நடுவராக இருந்து வந்தவர் பென்னி தயால்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி நான் சூப்பர் சிங்கர் பற்றி எதுவும் பதிவு போட போவதில்லை என்றும் அதில் இருந்து வெளியேறுகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும், என்னால் எல்லாம் மோசமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது, நான் சாதாரண மனிதன், எல்லாவற்றிற்கும் நன்றி எனவும் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன ஆயிற்று என சோகத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.