இனி விஜே பிரியங்காவுக்கு பதில் இவர்தான்? என்ன காரணம் - வைரலாகும் வீடியோ!

Priyanka Deshpande Super Singer
By Sumathi Dec 01, 2023 02:30 PM GMT
Report

விஜே பாவனா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் 

விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர் பிரியங்கா. இவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதை அடுத்து பிரபலமாக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

super singer

இதற்கிடையில், 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கென்றும், மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா காம்போவிற்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

8 வருஷ கல்யாண வாழ்க்கை - பிரியங்கா விவாகரத்தே செய்யாமல் கணவரை பிரிய இதுதான் காரணம்!

8 வருஷ கல்யாண வாழ்க்கை - பிரியங்கா விவாகரத்தே செய்யாமல் கணவரை பிரிய இதுதான் காரணம்!

விஜே பாவனா

முன்னதாக விஜே பாவனா இதனை தொகுத்து வந்தார். அதன்பின் இதிலிருந்து பிரேக் எடுத்த நிலையில் மீண்டும் 6 வருடங்களுக்குப் பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். ப்ரீ இறுதி சுற்று நடக்கவுள்ள நிலையில் பிரியங்காவிற்கு பதில் இந்த வாரம் விஜே பாவனா தொகுத்து வழங்கியிருக்கிறார்.

vj priyanka

அதன் புரோமோ வீடியோ வெளியாகி தற்போது ரசிகர்களிடையில் வைரலாகி வருகிறது. மேலும், விஜே பிரியங்கா எங்கே என்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளது.