ஷோவில் மனைவிக்கு லிப்லாக் - சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகர்

Super Singer Viral Photos Benny Dayal
By Sumathi 3 வாரங்கள் முன்
Report

பிரபல பாடகர் பொது இடத்தில் மனைவிக்கு லிப்லாக் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பென்னி தயாள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருப்பவர் பென்னி தயாள். இவர் நீண்ட நாள் காதலியான கேத்தரின் தங்கம் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஷோவில் மனைவிக்கு லிப்லாக் - சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகர் | Super Singer Benny Dayal Kiss Wife Public Event

’பாபா’ திரைப்படத்தில் இடம் பெற்ற ’மாயா மாயா’ என்ற பாடலின் மூலம் தமிழில் பாடகராக அறிமுகமானார். அதன்பின், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி உள்பட பல மொழிகளில் பாடி உள்ளார்.

 வைரல் ஃபோட்டோ

மேலும், ஏஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், ஜிவி பிரகாஷ், ஜேம்ஸ் வசந்தன் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல பிரபல இசையமைப்பாளர்களின் பாடல்களை பாடியுள்ளார்.

ஷோவில் மனைவிக்கு லிப்லாக் - சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகர் | Super Singer Benny Dayal Kiss Wife Public Event

இந்நிலையில், பேஷன் நிகழ்ச்சிக்கு ஒன்றிற்கு சென்ற பென்னி தயாள் பலபேர் முன்னிலையில் மனைவிக்கு லில் லாக் கொடுத்த ஃபோட்டோ வெளியாகி இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொது இடத்தில் இவ்வாறு நடந்துக்கொண்டது முகம் சுளிக்க வைப்பதாக தெரிவிக்கின்றனர்.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.