சூப்பர் ஹிட் படத்தில் நடித்தவர்.. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை!

pariyerum perumal kathir
By Jon Feb 10, 2021 01:40 AM GMT
Report

பரியேறும் பெருமாள் பட நடிகரான தங்கராசு ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படம் சூப்பரான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் ஹீரோ கதிரின் தந்தையாக நடித்திருப்பவர் தங்கராசு, தெருக்கூத்து கலைஞர்.

அதன்பின்னர் எந்த படத்திலும் இவர் நடிக்கவில்லை, வயதாகிவிட்டதால் தெருக்கூத்துகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

  சூப்பர் ஹிட் படத்தில் நடித்தவர்.. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை! | Super Hit Movie Actor Thangarasu

இவரது மகள்கள் உறவினர் வீட்டில் தங்கிவிட, பிழைப்புக்காக கிடைத்த வேலையை செய்து வந்துள்ளார். கொரோனாவால் அதற்கும் வழியில்லாமல் போனதுடன், கடும் மழையால் வீடும் சேதமடைந்தது. முன்பு ஒரு வேளை உணவு சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது வேலையும் இல்லாததால் ஒரு வேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வருகிறார் தங்கராசு.

இவரது கஷ்டம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீட்டை சரிசெய்து, ஒரு மகளுக்கு தனியார் பள்ளியில் வேலை வாங்கித் தருவதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உறுதி அளித்துள்ளார். மேலும் திரையுலகை சேர்ந்தவர்கள் இவருக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.