மெட்டி ஒலி நடிகை உமா உயிரிழப்பு - இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்

death reason Metti Oli Uma Maheswari
By Anupriyamkumaresan Oct 18, 2021 10:12 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை உமா மஹேஸ்வரி நேற்று காலமானதையடுத்து இவரது மறைவுக்கான உண்மை காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் தான் மெட்டி ஒலி. ஒரே குடும்பத்தில் உள்ள 5 பெண் பிள்ளைகளை கரைசேர்க்க போராடும் ஒரு தந்தையும், அந்த பெண்கள் தங்களது வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களையும் கருவாக வைத்து தயாரிக்கப்பட்டது தான் இந்த மெட்டி ஒலி சீரியல்.

மெட்டி ஒலி நடிகை உமா உயிரிழப்பு - இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல் | Suntv Mettioli Serial Actress Uma Death Reason

இந்த சீரியலில் நடித்திருக்கும் 5 மகள்களில் ஒருவராக விஜி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை உமா மஹேஸ்வரி. சில தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிகையாக வலம் வந்த உமா மஹேஸ்வரி மெட்டி ஒலி சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

அதே போல மெட்டி ஒலி சீரியலும், நடிகை உமா மஹேஸ்வரிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த சீரியலில் நடித்து முடித்த பிற்பாடு திருமணம் செய்து கொண்ட இவர் சென்னையில் தனது கணவர் மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை திடீரென நடிகை உமா மஹேஸ்வரி மரணமடைந்துள்ளார். இந்த மரண செய்தி தமிழ் சின்னத்திரையுலகை சோகத்தில் அமிழ்த்தியுள்ளது.

மெட்டி ஒலி நடிகை உமா உயிரிழப்பு - இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல் | Suntv Mettioli Serial Actress Uma Death Reason

தற்போது 40 வயதை எட்டியிருக்கும் நடிகை உமா மஹேஸ்வரி சமீபகாலமாக மஞ்சள் காமாலை நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நோய்க்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த இவர் சிகிச்சை பலனின்றி திடீரென மரணமடைந்துள்ளார் என்று இவரது மரணத்துக்கு காரணமாக சொல்லப்பட்டு வருகிறது.