தமிழ்நாட்டில் திடீரென வானில் தோன்றிய அதிசய ஒளிவட்டம் - கலர் கலராக மின்னிய நிகழ்வு - மக்கள் மகிழ்ச்சி
சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், சூரியனைச் சுற்றி கலர், கலராக ஒளி வட்டம் தெரிகிறது.
வானில் சூரியனை சுற்றி அதிசயம் நிகழ்ந்தது வேறு எங்கும் இல்லை.. திருப்பூர் மாவட்டத்தில் தான். திருப்பூர் மாவட்டத்தில் சூரியனை சுற்றி வானவில் நிறத்தில் பல வண்ண ஒளிவட்டம் தோன்றியது.
இந்தக் காட்சி வானத்தில் தெளிவாகத் தெரிந்தது. இந்த ஒளி வட்டம் வானவில் போல, அதுவும் கலர் கலராக காட்சி அளித்தது. இதைப் பார்த்த மக்கள் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்து மகிழ்ந்தனர்.
வெளிப்புறம் இளம்பழுப்பு நிறத்திலும், உள்பக்கமாக பல வண்ண நிறத்திலும் கலந்து இந்த ஒளிவட்டம் தென்பட்டது. இந்த ஒளிவட்டம் 11.25 முதல் 12.40 வரை சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்துள்ளது.
இது எப்படி உருவாகிறது?
வளிமண்டலத்தின் மேற்பரப்பில் மழை மேகங்கள், உயரத்தில் செல்லும்போது பனிக்கட்டி துகள்களாக மாறி, அதன் மீது சூரிய ஒளி பட்டு, ஒளி விலகல் அடையுமாம். அதனால்தான இந்த நிகழ்வு ஏற்படுகிறதாம்.