உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்" சைக்கிளுடன் போஸ் கொடுக்கும் சன்னிலியோன்!

Sunny Leone Cycle Petrol Price
By Thahir Jul 09, 2021 10:50 AM GMT
Report

பெட்ரோல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும், பிரபலங்களும் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்" சைக்கிளுடன் போஸ் கொடுக்கும் சன்னிலியோன்! | Sunnyleone Photos

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசுகள் உயர்ந்த போது, இனிமேல் சைக்கிளில்தான் போக வேண்டும் போல என்று அக்‌ஷய் குமார் சைக்கிள் படத்தை வெளியிட்டு இருந்தார். பெட்ரோல் 100 ரூபாயை கடந்த நிலையில் நடிகை சன்னி லியோன் கலாய்த்திருக்கிறார்.

முன்பு ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் இப்போது பாலிவுட்டின் ஸ்டாராகிவிட்டார். தமிழில் அவர் நடிப்பில் இரண்டு படங்கள் தயாராகின்றன. இரண்டும் நாயகி மையப்படங்கள். இந்த கொரோனா காலகட்டத்தில் மலையாளத்தில் ஒரு படம் நடித்தார். அத்துடன், சாலையோரம் உணவின்றி சிரமப்பட்ட மும்பை வாசிகளுக்கு சன்னி லியோன் இந்த ஊரடங்கு காலத்தில் உணவளித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

இந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து அவர் டுவீட் செய்துள்ளார்.அதில் "கடைசியில் 100 ரூபாயை கடந்த நிலையில், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்" என்று சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பெட்ரோல் 100 ரூபாய்க்கு மேல் போய்விட்டது. பைக், காருக்கெல்லாம் பெட்ரோல் போட்டு கட்டு படியாகாது. எல்லோரும் சைக்கிளுக்கு மாறினால் உடல் ஆரோக்கியம் பெறும் என்கிறார் சன்னி லியோன்.