ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய சன்னி லியோன் - இணையத்தில் வைரலாகும் வீடியோ
கடந்த இரண்டு வருடங்களாக உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி வரும் ஒரு சொல் கொரோனா. இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல திரையுலக பிரபலங்களும் தங்களால் இயன்றவற்றை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சன்னி லியோன் கொரோனா தடுப்பூசி குறித்து பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன்னி லியோன் தற்போது பாலிவுட், தமிழ், தெலுங்கு, மலையாள மொழி சினிமாக்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வரும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது கொரோனாவால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் ஒளிந்து கொண்டிருப்பதை குறிக்கும் வகையில் நடிகை சன்னிலியோன் சிறைபோல் இருக்கும் கம்பிகளுக்கு பின்னால் ஒளிந்திருப்பதை போன்று நடித்திருக்கிறார்.
இந்த சிறையில் இருந்து தப்பிக்க ஒரே தீர்வு கொரோனா தடுப்பூசிதான். அதைப் போட்டுக்கொண்டால் வேறென்ன? கொண்டாட்டம்தான் எனக் கூறுவதை போல் சன்னி லியோன் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் இயக்குநர் வடிவுடையான் இயக்கத்தில் 'வீரமாதேவி' எனும் படத்தில் நடிப்பதற்காக சன்னிலியோன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இதுத்தவிர இயக்குநர் யுவன் இயக்கத்தில் 'ஓ மை கோஸ்ட்' படத்திலும் சசிகுமார் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் சன்னி லியோன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.