மாலத்தீவு கடலில் பிகினி உடையில் ஓடி வரும் சன்னிலியோன் - இணையத்தை கலக்கும் வீடியோ

sunnyleone MALDIVES sunnyleoneMALDIVES SIGNATURECOLLECTIONMALDIVES
By Petchi Avudaiappan Mar 25, 2022 06:45 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகை சன்னி லியோன் மாலத்தீவு கடலில் எடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

கவர்ச்சி புயல் என்றால் அது சன்னி லியோன் தான் என பெயர் எடுத்த காலம் போய் அவருக்குள் இருக்கும் நல்ல குணத்துக்காகவே அவருக்கு ரசிகர்கள் ஆனவர்கள் ஏராளம். பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர்  தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். 

இதனிடையே டேனியல் வெபர் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட சன்னி , ஒரு பெண் குழந்தையும் தத்தெடுத்து வளர்த்து வந்தார். இதனைத் தொடர்ந்து வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளையும் பெற்று தற்போது வளர்த்து வருகிறார். 

சன்னி லியோன் இந்தியாவில் எங்கு சென்றாலும் அவரைக் காண அலைமோதும் ரசிகர் கூட்டம் ஏராளம். தான் எந்தளவுக்கு பிசியாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி அப்டேட்டுகளை கொடுக்க அவர் தவறுவதே இல்லை. 

இந்நிலையில் கோடை விடுமுறைக்காக மாலத்தீவு சென்றுள்ள சன்னி லியோன் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தைக் கலக்கி வருகின்றன. அந்த வகையில் கடல் நீரில் பிகினி உடையில் சன்னி லியோன் ஓடி வரும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.