ரசிகரின் செயலால் நெகிழ்ந்துப்போய் கிண்டலாக வாழ்த்து கூறிய சன்னி லியோன் - இணையத்தில் வைரலாகும் வீடியோ
இந்தி திரையுலகில் முன்னணி காதநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் நடிப்பில் அனாமிகா என்ற சீரிஸ் எம்.எக்ஸ் பிலேயரில் தற்போது ஒலிப்பரப்பாகி கொண்டிருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு ஒன்றில் கலந்துக்கொண்ட சன்னி லியோனை பார்ப்பதற்கு அவரது ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
அப்போது ரசிகர் ஒருவர் ஓடி வந்து தனது கையில் சன்னி லியோனின் பெயரை டாட்டு போட்டிருப்பதை சன்னியிடம் காட்டுகிறார்.
அதனை கண்டு நெகிழ்ச்சி அடைந்த சன்னி லியோன், அந்த ரசிகரிடம் நீண்டநேரம் பேசினார்.
பின்னர், அங்கிருந்த ஒரு நபரை வீடியோ எடுக்குமாறு கூறிய அவர், "மிகவும் அறுமையாக இருக்கிறது... மிக்க நன்றி" என ரசிகரிடம் கூறுகிறார்.
இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சன்னி லியோன், "நீங்கள் எப்போதும் என்னை காதலித்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
ஏனென்றால் இப்போது உங்களுக்கு வேறு வழி இல்லை. உங்களுக்கான மனைவியை கண்டுப்பிடிக்க வாழ்த்துக்கள்" என கிண்டலாக சிரித்த இமோஜியுடன் கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.