நடிகை சன்னி லியோனுக்கு ரூ.1000 உதவித் தொகை.. இதுதான் காரணம் -அதிகாரிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!
நடிகை சன்னி லியோனுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உதவித் தொகை
தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக தலைமையிலான ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், திருமணமான பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது.மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் இதுபோன்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நடிகை சன்னி லியோனுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
சன்னி லியோன்
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பாஜக அரசும் மஹ்தாரி வந்தன் யோஜனா என்ற பெயரில் திருமணமான பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெயரில் போலி வங்கிக் கணக்கு திறக்கப்பட்டுள்ளது. அந்த வங்கிக் கணக்குக்கு மாதம் 1000 ரூபாய் செலுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். போலிக் கணக்கைத் வீரேந்திர ஜோஷி என்ற நபர் தொடங்கியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.