உத்திர பிரதேச காவலர் பணியில் சன்னி லியோன்..! வைரலாகும் ஹால் டிக்கெட்
காவலர் பணிக்கான ஹால்டிக்கெட்டில், சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்ற சம்பவம் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சன்னி லியோன்
முன்னாள் ஆபாச பட நாயகியான சன்னி லியோன், தற்போது இந்திய மொழி படஙக்ளில் பிஸியான நாயகியாக வளம் வருகின்றார்.
தொடர்ந்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வரும் அவர், வேறு சில தொழில்களிலும் கவனம் செலுத்து வருகிறன்றார்.
இந்நிலையில் தான், உத்திர பிரதேச மாநில காவலர் பணி தேர்வில் ஹால்டிக்கெட்டில் அவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில், விண்ணப்பதாரின் புகைப்படத்திற்கு பதில் சுன்னி லியோன் புகைப்படம் இடம்பெறுள்ளது.
Sunny Leone applied for UP police constable examination....?? pic.twitter.com/YuxYMzGjwt
— Simple man (@ArbazAh87590755) February 17, 2024
ஹால் டிக்கெட் போலியானது என்றும், விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும்போது நடிகையின் புகைப்படம் பதிவேற்றப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, தேர்வு நாளில் அந்த ஹால் டிக்கெட்டை பயன்படுத்தி யாரும் தேர்வு எழுத வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.