அவர்கள் முன்னால் ஆடமாட்டேன்..படப்பிடிப்பை நிறுத்திருவேன் - கண்டிஷன் போட்ட சன்னிலியோன்
படப்பிடிப்பில் குழந்தைகள் இருந்தால் ஆடமாட்டேன் என நடிகை சன்னிலியோன் கூறியுள்ளார்.
சன்னிலியோன்
பாலிவுட் திரையுலகின் பிரபலமாணவர்களில் முக்கியமானவர் சன்னிலியோன். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் வடகறி படத்தில் நடனமாடிய சன்னிலியோன், வீரமாதேவி என்ற படத்திலும் நடித்தார்.

ஆனால், பல்வேறு காரணங்களால் இப்படம் முடக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆர்.யுவன் என்பவர் இயக்கியுள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். வீரா சக்தி மற்றும் கே. சசிகுமார் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
நிபந்தனை
இதில், சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் சன்னிலியோன், படப்பிடிப்பு தளத்தில் தான் கவர்ச்சியாக நடனமாடும் போது குழந்தைகள் இருக்கக்கூடாது என்று நிபந்தனை வித்தித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் "நான் தொடர்ந்து பல படங்களில் குத்துப் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமாடி வருகிறேன். தான் கவர்ச்சியாக நடனமாடும் காட்சிகள் படமாக்கப்படும் போது, அந்த படப்பிடிப்பு தளத்தின் சுற்றுப் பகுதியில் குழந்தைகள் இருக்கக்கூடாது என படக்குழுவிடம் கண்டிப்பாக கூறியுள்ளேன்.
அதை மீறி குழந்தைகள் இருந்தால் படப்பிடிப்பையே நிறுத்திவிடுவேன்" என தெரிவித்துள்ளார்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil