சன்னிலியோனை புகழ்ந்தால் 10 சதவீதம் தள்ளுபடி - தீவிர ரசிகரின் அதிரடி ஆஃபர்..!
நடிகை சன்னிலியோனை பற்றி புகழ்ந்து கோழி கறி வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என கோழிக்கடை உரிமையாளர் வினோத ஆ.பர் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மண்டியாவில் சிக்கன் கடை நடத்தி வருபவர் பிரசாந்த்.இவர் நடிகை சன்னிலியோனின் தீவிர ரசிகர்.
இவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் சன்னிலியோன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 10 சதவீத தள்ளுபடி வழங்கி வருகிறார்.
வாடிக்கையாளர் சன்னிலியோன் ரசிகர் தானா என்பதை கண்டுபிடிக்க சில நிபந்தனைகளை விதித்துள்ளார். அதன்படி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நடிகை சன்னிலியோனை பின்தொடர வேண்டும்.
அவர்களின் மொபைல் போன்களில் குறைந்தது 10 சன்னிலியோன் புகைப்படங்களையாவது வைத்திருக்க வேண்டும்.
சன்னிலியோன் நடித்த எல்லா படங்களும் நல்ல படங்கள் என்று பாராட்டப்பட வேண்டும்.
இந்த நிபந்தனைகள் எல்லாம் வாடிக்கையாளரிடம் இருந்தால் 10 சதவீத தள்ளுபடியில் சிக்கன் கிடைக்கும் என்று பிரசாந்த் தெரிவித்துள்ளார்.