திருமணத்துக்கு முன்பு ஒருவருடன்.. என்னை ஏமாற்றிவிட்டார் - சன்னி லியோன் வேதனை!
தனது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து நடிகை சன்னி லியோன் பகிர்ந்திருக்கிறார்
சன்னி லியோன்
இந்தி பிக்பாஸ் சீசன்- 5, நாகினி போன்ற டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் சன்னி லியோன். பின்னர் பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பாடல்களுக்கு நடனம், துணை நடிகை மற்றும் சில படங்களில் ஹீரோயினாகவும் கலக்கியுள்ளார்.
தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். மேலும், ஓ மை கோஸ்ட், தீ இவன் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தனது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "என் திருமணத்துக்கு முன்பு ஒருவரை காதலித்தேன்.
வேதனை
இருவரும் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டோம். ஹவாய் தீவில் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தோம். இதற்காக ஓட்டல் அறைகள் என்று அனைத்தையும் புக் செய்து பணமும் கட்டிவிட்டேன். ஆனால் என்னை அவர் ஏமாற்றிவிட்டார். ஒரு நாள் உன்னை நான் காதலிக்கவில்லை. உன்மீது இருந்த காதல் எப்போதோ போய்விட்டது என்றார்.
அதை கேட்டு என் காலடியில் பூமி நகர்வதுபோல் இருந்தது. இரண்டு மாதத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்து இருந்தபோது இப்படி அவர் பேசியது மனதை மிகவும் பாதித்தது. அதன்பிறகு கடவுள் டேனியல் வெபரை அறிமுகம் செய்தார். எங்களின் இரண்டு மனங்களும் இணைந்ததால் திருமணம் செய்து கொண்டோம்'' என்று வேதனை தெரிவித்துள்ளார் .