சன்னி லியோனுக்கு பிடித்த நபராக மாறிப்போன இளைஞர்கள்... ஒரே கொண்டாட்டம் தான்...!
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சன்னி லியோன் ரசிகர் ஒருவரை பாராட்டியுள்ளது ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
ஆபாச நடிகையாக அறியப்பட்டாலும் தனது குணநலன்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள நடிகை சன்னி லியோன் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே கடந்த மே 13 ஆம் தேதி அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதனை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் சன்னியின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கொம்மேரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சன்னி லியோனுக்கு கட்-அவுட் வைத்து கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர். இதன் வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த சன்னி லியோன் மாண்டியா இளைஞர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பதிவு ஒன்றையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan