2025-ல்தான் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவாரா? நாசா சொன்ன தகவல்!

NASA
By Sumathi Aug 09, 2024 06:21 AM GMT
Report

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது குறித்து நாசா தகவல் தெரிவித்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58) மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர்(61) இருவரும் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

sunita williams

தொடர்ந்து திட்டமிட்டபடி கடந்த 22ஆம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயுக்கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது.

ஆபத்தில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்? - விண்வெளி நிலையத்தில் உள்ள பிரச்சனை

ஆபத்தில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்? - விண்வெளி நிலையத்தில் உள்ள பிரச்சனை

நாசா தகவல்

இதனால் 50 நாட்களுக்கும் மேலாக சுனிதா அங்கு சிக்கியுள்ளார். அவர்களை அழைத்து வர நாசா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நாடியுள்ளது. அதன்படி, டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலன் உதவியுடன் அவர்களை அழைத்துவரவுள்ளனர்.

2025-ல்தான் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவாரா? நாசா சொன்ன தகவல்! | Sunita Williams Stay Stranded In Space 2025 Nasa

4 வீரர்கள் குழுவுடன் விண்வெளிக்குச் செல்லும் இந்த டிராகன் விண்கலன் அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் பூமிக்கு திரும்பும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் சென்றவர்கள் 8 மாதம் கழித்தே பூமி திரும்புவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தயார் செய்துவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.