9 மாத தவிப்பு.. இன்று பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் - நாசா அறிவிப்பு!
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமிக்கு திரும்புகிறார்.
சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் இருவரும் சர்வதேச விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 8 நாட்களில் பூமிக்கு திரும்பும் திட்டத்துடன் அவர்கள் விண்வெளிக்கு சென்றனர்.
ஆனால் அவர்கள் சென்ற போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 9 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு கொண்டு வர நடவடிக்கை மஸ்க்கிற்கு உத்தரவிட்டு இருந்தார்.அதன்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 'குரூ டிராகன்' விண்கலத்தில் இருவரையும் அழைத்து வருவதாக எலான் மஸ்க் உறுதியளித்தார்.
பூமிக்கு திரும்புகிறார்
அதன்படி, குரூ டிராகன் விண்கலம் பால்கன்9 ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்கள் குழு சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றது.இதனையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் டிராகன் விண்கலத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்புகின்றனர்.
இந்திய நேரப்படி இன்று காலை 10.15 மணி அளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் புறப்பட உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. சுமார் 17 மணி நேர பயணத்திற்குப் பின் புதன்கிழமை அதிகாலை 3.27 மணி அளவில் குழு பூமியை வந்தடையும் என நாசா அறிவித்துள்ளது.