விண்ணில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. அடுத்தடுத்து ஏற்படும் தடங்கல் - காரணம் என்ன?

Sunil Gavaskar Donald Trump NASA World
By Vidhya Senthil Mar 13, 2025 06:13 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைத்து வருவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் 

கடந்தாண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்ணில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.

விண்ணில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. அடுத்தடுத்து ஏற்படும் தடங்கல் - காரணம் என்ன? | Sunita Williams Faces Delay In Returning To Earth

10 நாள் பயணமாக விண்வெளிக்கு சென்றவர்கள், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக சுமார் 9 மாதங்களாக பூமி திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு கொண்டு வர நடவடிக்கை மஸ்க்கிற்கு உத்தரவிட்டு இருந்தார்.

நாயின் வயிற்றில் 24 சாக்ஸ்.. மருத்துவர்களை மிரளவைத்த சம்பவம்- பகீர் பின்னணி!

நாயின் வயிற்றில் 24 சாக்ஸ்.. மருத்துவர்களை மிரளவைத்த சம்பவம்- பகீர் பின்னணி!

இதனை தொடர்ந்து, எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம், வரும் 16 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்தது.இந்நிலையில், தற்போது அந்த திட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

 சிக்கல் 

இதனால், சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மேலும் தள்ளிப் போகிறது. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’ அதிகாலை 5.20 மணிக்கு, அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து டிரான் விண்கலத்துடன் சீறிபாய தயாராக இருந்த பால்கன் 9 ராக்கெட்டில் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

விண்ணில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. அடுத்தடுத்து ஏற்படும் தடங்கல் - காரணம் என்ன? | Sunita Williams Faces Delay In Returning To Earth

இதனால் இந்த திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும் சுனிதாவை பூமிக்கு அழைத்து வர மீண்டும் ராக்கெட் ஏவக் கூடிய தேதி மற்றும் நேரம் விரைவில் வெளியாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.