அவரால் 4 முறை.. நடுரோட்டில் ஆடை இல்லாமல் போராட்டம் நடத்திய நடிகை!
பிரபல தயாரிப்பாளர் அலுவலகம் முன் நடிகை சுனிதா போயா நிர்வாண போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுனிதா போயா
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் பன்னி வாசு. இவர் கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல ஹிட் படங்களையும் தயாரித்துள்ளார். இந்நிலையில், இவர் மீது துணை நடிகை சுனிதா போயா குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னை ஏமாற்றிய பன்னி வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவரது தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் நடிகை திடீரென நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார் அங்கிருந்து சுனிதாவை அழைத்துச் சென்றனர்.
நிர்வாண போராட்டம்
மேலும் அவரை உடைகளை உடுத்த வைத்து, தயாரிப்பாளர் ஹைதராபாத் வருகை தந்ததும் அவரிடம் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். நடிகையில் இந்த போராட்டம் இது முதல் முறையல்ல. ஏற்கனவே இவர் இதேபோல் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனையடுத்து, அவரது தொல்லை தாங்க முடியாமல் நான் 4 முறை ஆஸ்பத்திரிக்கு சென்றதாகவும் சுனிதா போயா கூறியுள்ளார்.