முட்டாள்.. முட்டாள்.. இப்படியா விளையாடுவது.. மோசமான ஷாட் - பண்டை சாடிய கவாஸ்கர்!
ரிஷப் பண்ட் ஆட்டமிழந்ததை சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கவாஸ்கர்
ஆஸ்திரேலியா, மெல்போர்னில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-1 என்று சமநிலையில் உள்ளதால்
இந்திய அணி கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய இக்கட்டான சூழலில் களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்தது. பிறகு முதல் துவங்கிய இந்திய அணியில் 159 ரன்களுக்குள் ஆகாஷ் தீப் தவிர அடுத்தடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
இப்படிப்பட்ட சூழலில் அடுத்த களம் இறங்கிய ரிஷப் பண்ட் கடுமையான நேரத்தில் இறங்கினார். ஆனால் 37 பந்துகளை எதிர் கொண்டு 28 ரன்கள் அடித்த நிலையில் போலண்ட் பந்து வீச்சில் தேவையே இல்லாத ஒரு ஷாட் விளையாடி ஆட்டமிழந்தார்.
மோசமான ஷாட்
இது இந்திய அணியை சிக்கலில் தள்ளி இருக்கும் நிலையில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறியதாவது, “முட்டாள் முட்டாள். நீங்கள் விளையாடுவதற்கு தகுந்தவாறு பின்னால் இரண்டு பீல்டர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் நீங்கள் அதை அறியாமல் இன்னும் அந்த ஷாட் விளையாடச் செல்கிறீர்கள். நீங்கள் எங்கு பிடிபட்டு இருக்கிறீர்கள் என்று பாருங்கள். இது உங்களது இயல்பான விளையாட்டு என்று சொல்ல முடியாது மன்னிக்கவும் இது உங்கள் இயல்பான விளையாட்டு அல்ல இது ஒரு முட்டாள்தனமான ஷாட்.
இது உங்கள் அணியை மோசமாக வீழ்த்துகிறது நிலைமையை புரிந்து கொண்டு சரியாக விளையாடியிருக்க வேண்டும். அவர் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு செல்லக்கூடாது, வேறு ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு தான் செல்ல வேண்டும்” என்று கடுமையாக சாடினார்.