தோனி , கோலிக்கு பிறகு இவர்தான் கேப்டனுக்கு சரியான ஆள் : இளம்வீரரை கைகாட்டும் கவாஸ்கர்!

விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியினை வழிநடத்தும் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் தான் தகுதியானவர் என இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய கேப்டனாக பார்க்கப்படுபவர் கேப்டன் விராட் கோலி. அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்

கோலி பதவி விலகும் பட்சத்தில் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக யார் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர், விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியினை வழிநடத்தும் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் தான் தகுதியானவர் என கூறியுள்ளார்.

தற்போதுவரை ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் ,சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த தொடரில் கூட தனது அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருவதாக கூறினார். ஆகவே , கே.எல் ராகுலை இந்திய அணியின் அடுத்த கேப்டனாக உருவாக்க முயற்சி செய்யலாம் எனவே இந்திய அணியில் அவரை முதலில் துணை கேப்டனாக செயல்பட வைத்து பின்னர் படிப்படியாக கேப்டனாக உயர்த்தலாம் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்