கேட்சுகளை நழுவ விட்ட விராட் கோலியை கடுமையாக விமர்சனம் செய்த கவாஸ்கர்...!

Sunil Gavaskar Virat Kohli
By Nandhini Dec 26, 2022 07:30 AM GMT
Report

கேட்சுகளை பிடிக்காமல் நழுவ விட்ட இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

விராட் கோலியை விமர்சனம் செய்த கவாஸ்கர்

வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் இந்தியா எதிர்கொண்டு விளையாடியது. வங்காளதேச அணி 2-வது இன்னிங்சில் 231 ரன்னில் ஆல் அவுட்டானது.

இதனையடுத்து, 145 ரன் எடுத்தால் வெற்றி என்று களத்தில் இறங்கியது இந்திய அணி. ஷ்ரேயாஸ் அய்யர் - அஸ்வின் ஜோடி நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். இதன் மூலம் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில், 2-வது டெஸ்டில் ஸ்லிப் பகுதியில் நின்ற விராட் கோலி கேட்சுகளை நழுவவிட்டார். இதை முன்னாள் கேப்டன் கவாஸ்கர் விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், ஸ்லிப்பில் நிற்கும் இந்திய வீரர்கள் முழுங்காலில் கை வைத்து நிமிர்ந்து நிற்கிறார்கள். ஆனால், ஸ்லிப் பகுதியில் நின்ற விராட் கோலி கேட்சுகளை நழுவவிட்டார். 200-க்கும் மேற்பட்ட கேட்சுகளை பிடித்த ஒரே இந்தியரான ராகுல் டிராவிட் பயிற்சியாளர் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்றார்.     

sunil-gavaskar-virat-kohli-cricket-players