இந்தியாவின் தோல்விக்கு ஜடேஜாதான் : கொந்தளித்த கவாஸ்கர்
இந்தியாவின் தோல்விக்கு ஜடேஜாவின் நோ-பால் ஒரு காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தோல்வி
டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான 3 - வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு ஜடேஜா தான் காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய அணியின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் போட்டியின் முதல் இன்னிங்சில் மார்னஸ் லபுஸ்சகனே-க்கு வீசிய 5வது பந்தில் அவர் பௌலேட் ஆனார்.
கவாஸ்கர் கருத்து
அனால் அது நோ-பாலாக மாறியது. இதனால் ஜடேஜா உட்பட இந்திய அணி அதிர்ச்சியடைந்து.
மேலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய லபுஸ்சகனே கவாஜாவுடன் ஜோடி சேர்ந்தது 96 ரன் பார்ட்னெர்ஷிப் புரிந்தார்.
ஒருவேளை இந்தியாவுக்குப் போட்டியின் பெரிய அடிஎன்று நீங்கள் கூறுவீர்கள், அதற்குப் பிறகு அவர்கள் (லாபுஷாக்னே மற்றும் உஸ்மான் கவாஜா) இந்தியா 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது 96 ரன்களின் பார்ட்னர்ஷிப்பைத் அளித்தார்கள்.
அதனால் அதுவே திருப்புமுனையாக இருக்கும் என்று நினைக்கிறேன் அதே சமயம் இந்தியாவின் தோல்விக்கு ஜடேஜாவின் நோ - பால்தான் காரணம் எனக் கூறினார்.