குழப்பத்தில் இந்திய அணி ... என்ன செய்ய போகிறது இங்கிலாந்து?

INDvsENG sunil gavaskar
By Petchi Avudaiappan Aug 03, 2021 09:46 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

 இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி வாய்ப்புகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார் .

இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று நாட்டிங்காமில் தொடங்குகிறது. இதற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகு 6 வார கால இடைவெளி கிடைத்ததால் இப்போட்டிக்கு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

ஆனால் பயிற்சி போட்டிகளில் சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆவேஸ் கான், மயங்க் அகர்வால் ஆகியோர் காயமடைந்ததால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தாக்குப் பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

குழப்பத்தில் இந்திய அணி ... என்ன செய்ய போகிறது இங்கிலாந்து? | Sunil Gavaskar Prediction About Indvseng 1St Test

இந்நிலையில் முன்னாள் இந்திய அணி வீரர் சுனில் கவாஸ்கர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் 10 நாட்கள் முன்னர் தான் இங்கிலாந்தில் இருந்து திரும்பியதாகவும், இம்முறையும் வானிலை தான் போட்டியில் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே 5 டெஸ்ட் போட்டிகளின் 25 நாட்களில் 22 நாட்கள் வெயில் அடித்தால் கூட இந்திய அணி 4 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிடும். இதையெல்லாம் விட கேப்டன் விராட் கோலியின் பங்களிப்பு இந்த தொடருக்கு முக்கியமானது என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.