தோனியால் ஒன்னும் கிழிக்க முடியாது - கவாஸ்கர் கருத்தால் பரபரப்பு

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கிடைக்கப்போகும் முன்னாள் கேப்டன் தோனியின் பங்களிப்பு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்துள்ளார். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வீரர்களுக்கு வழங்கும் பயிற்சி மற்றும் அறிவுரைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. 

இந்நிலையில் தோனி செய்யும் பணியின் தாக்கம் குறித்து தனது கருத்தை சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதில் வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இது அதிவிரைவாக நடைபெறும் ஆட்டம் என்பதால் தோனி டிரஸ்சிங் ரூமில் வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள உதவலாம். அதே நேரத்தில் அணிக்கு தேவைப்படும் போது கள வியூகங்களையும் அவர் அமைத்துக் கொடுக்கலாம்.

டைம்-அவுட்டின் போது பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுடன் பேச வாய்ப்புள்ளது. மற்றபடி ஆட்டத்தின் அழுத்தம் தொடங்கி அனைத்தையும் கையாள வேண்டிய பொறுப்பு களத்தில் நிற்கும் வீரர்கள் தான். தோனியை இந்த பணிக்கு நியமித்துள்ளது வரவேற்கத்தக்கது.அதே போல நாக்-அவுட் நிலைகளில் சரியான ஆடும் லெவனை இந்தியா களம் இறக்க வேண்டும். அதை செய்ய தவறினால் பாதகமாக அமையலாம். மேலும் முதலில் பேட் செய்ய வேண்டியதும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.  

You May Like This


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்