மும்பை இந்தியன்ஸ் .. சிறப்பான சம்பவங்கள் இனிமேதான் இருக்கு , வெயிட் பண்ணுங்க : சுனில் காவாஸ்கர் கருத்து
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்த முறை ரோகித் சர்மாவுக்கும் மும்பபை அணிக்கும் ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்பு உள்ளதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.
தொடங்கும் ஐபிஎல்
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மார்ச் மாதம் 31 ம் தேதி தொடங்கி மே 28 இறுதி போட்டி நடைபெறவுள்ளது. இந்த முறை அணைத்து அணிகளும் தங்களின் ஹோம் மைதானங்களில் விளையாடலாம் என கூறப்பட்டதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர், அதோடு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கம்பேக் கொடுக்குமா மும்பை
அதே சமயம் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த ஆண்டு மோசமானதாக அமைந்தது , ஆகவே இந்த முறை தரமான கம் பேக் கொடுக்க வேண்டும் என முனைப்புடன் உள்ளனர் ஆனால் அணியின் முக்கியத்துண்களாக உள்ள பொல்லார்ட் மற்றும் கெயீரன் ஓய்வினை அறிவித்துள்ளார்.
அதே போல் பும்ராவும் காயம் காரணமாக விளையட மாட்டார் என கூறப்படுகின்றது ஆனால் இதெல்லாம் பிரச்சினையே இல்லை என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர் :
காவாஸ்கர் நம்பிக்கை
இந்த முறை ஐபிஎல் போட்டியில் ரோஹித் தரமான சம்பவங்கள் செய்வார் என நம்புகிறேன் , அவரின் செயல்பாடுகள் நிச்சய்ம் இந்த முறை விளையாட்டில் அனைவரையும் ஈர்க்கும் என நம்புகிறேன் , அவருக்கு துணையாக ஜோபர் உள்ளார் எதிர் அணியின் ரன் ரேட்டை குறைக்க சிறப்பாக செயல்படுவார் எனக் கூறியுள்ளார்.
அதே சமயம் பல முக்கிய வீரர்களை இழந்து கொஞ்சம் தடுமாற்ற நிலையில் இருக்கும் மும்பை அணிக்கு ரோஹித் எந்த முறையில் வழி நடத்துவார் என்பதே அனைவரது கேள்வி