இந்திய அணிக்கு இந்த வீரர் தான் அச்சுறுத்தலாக உள்ளார்... - சுனில் கவாஸ்கர் பேட்டி..!

Sunil Gavaskar Cricket Indian Cricket Team Australia Cricket Team
By Nandhini Feb 08, 2023 06:56 AM GMT
Report

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பேட்டி கொடுத்துள்ளார். 

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டி நாளை முதல் மார்ச் 13ம் தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் அதை 3-0 அல்லது 2-0 என வென்றால் தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும். எனவே, இந்திய அணிக்கு இத்தொடர் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

sunil-gavaskar-indian-cricketer

இவர் தான் மிகப் பெரிய அச்சுறுத்தல்

இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் நாதன் லியோனை விட பேட் கம்மின்ஸ் தான் அச்சுறுத்தலாக இருக்க போகிறார் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் நாதன் லியோனை விட வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தான் ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பவராக உள்ளார். லியோன் ஒரு டாப் பவுலர். ஆனால் இந்திய மண்ணில் கம்மின்ஸ் போன்ற அட்டகாச பவுலர் தான் எதிர்பார்க்காத தாக்கத்தை ஏற்படுத்தி விடுவார்.

இவரின் ஆட்டத்தை கடந்த காலங்களில் நாம் பார்த்துள்ளோம். ஆஸ்திரேலிய அணி இவ்வளவு நாட்களாக வெற்றிகரமாக இருக்கிறது என்றால், அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் செய்யும் பணிகள் தான் முக்கிய காரணமாக உள்ளது.

ஜோஸ் ஹாசல்வுட் முதல் போட்டியிலிருந்து விலகி இருக்கிறார். இதனால் கம்மின்ஸை மட்டும் எப்படியாவது சமாளித்துவிட்டால், இந்தியாவுக்கு நல்லது என்று தெரிவித்துள்ளார்.