ஹர்திக் பாண்ட்யா வீட்டுக்கு போலாம்... வந்தாச்சு இந்திய அணிக்கு சூப்பர் வீரர்
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடத்திற்கு இவர்தான் மாற்று வீரராக வருவார் என ஒருவரை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக கடந்த பல ஆண்டுகளாக ஹர்திக் பாண்ட்யா விளையாடி வருகிறார். பேட்டிங்கில் சிறப்பாக பங்காற்றி வந்தாலும் இடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கடந்த சில மாதங்களாக பந்துவீச்சில் ஈடுபடவில்லை.
இதனிடையே தற்போது இந்திய அணி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அடுத்த வேகப்பந்து ஆல்-ரவுண்டராக கொல்கத்தா அணியின் இளம் வீரர் வருவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அந்த அணியின் இளம் வீரரான வெங்கடேச ஐயர் ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடுகிறார். அதேசமயம் அவர் பவுலிங்கில் இன்னும் பெரிய அளவில் அவரது திறனை வெளிக் காட்டவில்லை. ஆனால் அவரது யார்க்கர்களை பேட்ஸ்மேன்களால் விளையாட முடியவில்லை என கவாஸ்கர் கூறியுள்ளார்.