விராட் கோலியை தாறுமாறாக விமர்சித்த கவாஸ்கர்- கடுப்பான ரசிகர்கள்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருவது குறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்காக இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் முன்னாள் இந்திய அணி வீரர் சுனில் கவாஸ்கர் கேப்டன் விராட் கோலியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இப்போட்டியின் 2 இன்னிங்ஸிலும் 42,20 ரன்கள் மட்டுமே விராட் கோலி எடுத்தார். இதனை குறிப்பிட்டு பேசியுள்ள கவாஸ்கர் இரண்டாவது இன்னிங்ஸில் சாம் கரன் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்த விதம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. டெஸ்டில் 8000 ரன்களை கடந்த வீரர் ஒருவர், சரியான டைமிங் இல்லாமல், சற்று விரைவாகவே பேட்டை ஓங்கி விட்டார்.
அவரின் கால் ஒரு இடத்தில் உள்ளது, அவரின் பேட் ஒருபுறம் உள்ளது.டெஸ்டில் பழைய முறை தான் என்றும் கைக்கொடுக்கும். விராட் அதனை புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் கவாஸ்கர் கூறியுள்ளார்.
கடந்த ஓராண்டாகவே பார்ம் இன்றி தவித்து வரும் விராட் கோலி கடைசியாக 2019ம் ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்திருந்தார். அதன்பிறகு 6 டெஸ்ட்களில் விளையாடியுள்ள விராட் கோலி 2 அரை சதம் மட்டும் அடித்து 229 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.