ரிஷப் பண்ட் ஆட்டத்தை பார்த்து கடுப்பான சுனில் கவாஸ்கர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் விளையாடிய விதம் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி அதனுடைய 2வது இன்னிங்சில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 88 பந்துகளில் அதிரடியாக விளையாடி 41 ரன்கள் குவித்தார். ரசிகர்கள் ரிஷப் பண்ட் இறுதிப்போட்டியில் தேவையில்லாமல் அவுட் ஆகி விட்டார் என்று கூறிவந்தனர்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் எல்லா வகையிலும் கைதேர்ந்த வீரர். ஆட்டத்தில் எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்றும் எந்த பந்தை எப்படி கையாள வேண்டும் என்றும் அவருக்கு நன்றாகத் தெரியும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
மேலும் அவருக்கு கவனக்குறைவு நிறைய இருக்கிறது. அதன் காரணமாகவே அவரால் சதம் குவிக்க முடியவில்லை. இதை அவர் கூடிய விரைவில் சரி செய்து கொள்ள வேண்டும். சரி செய்யும் பட்சத்தில் அவருடைய கேரியர் பிரகாசமாகும் எனவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.