அந்த விஷ்யம் தான் பாண்டியா மரியாதையை ஏற்படுத்தியது : மனம் திறந்த சுனில் கவாஸ்கர்

Hardik Pandya Sunil Gavaskar
By Irumporai Jun 01, 2022 10:30 PM GMT
Report

ஹர்திக் பாண்டியாவின் அந்த பண்பு அவர் மீது மிகப்பெரும் மரியாதையை ஏற்படுத்தி விட்டது என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அறிமுகமான முதல் தொடரிலேயே குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக இந்த தொடரின் மூலம் கேப்டனாக அறிமுகமான ஹர்திக் பாண்டியா கேப்டனாக தனது முதல் தொடரிலேயே குறையே சொல்ல முடியாத அளவிற்கு செயல்பட்டு குஜராத் அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்துள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் வியந்து பாராட்டி பேசி வருகின்றனர்

இந்தநிலையில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்:

ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் எப்படி செயல்படுவார் பந்துவீச்சில் எப்படி செயல்படுவார் என்பது பற்றி நமக்கு நன்றாகவே தெரியும், ஆனால் ஒரு கேப்டனாக அவர் எப்படி செயல்படுவார் என்பதை இந்த தொடர் மூலம் நாம் அறிந்து விட்டோம்.

அந்த விஷ்யம் தான் பாண்டியா மரியாதையை ஏற்படுத்தியது : மனம் திறந்த சுனில் கவாஸ்கர் | Sunil Gavaskar Backs Hardik Pandya

குறிப்பாக ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் 4 ஓவர்களுமே சிறப்பாக வீசினார். அவர் அணியை வழிநடத்திய விதம் அணியோடு ஒன்றிணைந்து செயல்பட்ட விதம் என அனைத்தையும் பார்க்கும் பொழுது அவருக்கு தலைமைத்துவப் பண்பு இருப்பது நன்றாகவே தெரிகிறது.

அந்த பண்பு வந்து விட்டால் அவர் மீது தானாகவே மரியாதை வந்துவடும் அந்த மரியாதை அவரை அடுத்த கட்டமான இந்திய அணியை வழி நடத்துவதற்கு கொண்டு செல்லும்,

மேலும் தற்போதைய இந்திய அணி தேர்வாளர்களுக்கு 3-4 options உள்ளது நான் ஹார்திக் பாண்டியா அதில் எந்த இடத்தில் இருப்பார் என்று சொல்லவில்லை ஆனால் தேர்வாளர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது ” என்று சுனில் கவாஸ்கர் பேசினார்.