நீ பெரிய ஆள் எல்லாம் இல்லை - ரோகித் சர்மாவை எச்சரித்த முன்னாள் இந்திய வீரர்

rohitsharma sunilgavaskar
By Petchi Avudaiappan Nov 11, 2021 11:03 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மாவிற்கு முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் அறிவுரைகள் வழங்கியுள்ளார். 

நியூசிலாந்து அணி டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்தியா வர உள்ளது.  இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து பங்கேற்க உள்ளது.

டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்தது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டதால் ரோகித் சர்மா இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே இந்திய அணியை வழிநடத்த ரோகித் சர்மா தயாராகவே இருக்கிறார். அவரின் கேப்டன்சியில் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் புதிய அத்தியாதத்தை தொடங்குகிறது என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

மேலும் ரோகித் ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்றிருக்கிறார். ஆனாலும் மாநில அணியையோ, லீக் அணிகளையோ வழிநடத்துவது வேறு; தேசிய அணியை வழிநடத்துவது வேறு. ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்றதாலேயே, ஒருவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் வெற்றிகரமான கேப்டனாக ஜொலிப்பார் என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.