புஜாரா-ரஹானே வெளிப்படுத்திய மோசமான ஆட்டம் ; சுனில் கவாஸ்கர் காட்டம்

rahane ind vs sa bujara bad form
By Swetha Subash Jan 04, 2022 07:49 AM GMT
Report

புஜாரா, ரஹானே ஆகியோரின் விஷயத்தில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் இந்திய அணியின் தூணாக நின்று பல வெற்றிகளை தந்தவர்கள் என்ற காரணத்திற்காக இன்னமும் அவர்கள் மீது தேர்வர்கள் குழு ஓரளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளது.

ஆனால் அவர்களின் நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்து வருகின்றனர் புஜாரா மற்றும் ரஹானே.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரஹானே - புஜாரா ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

ஆனால் நாங்கள் மாறவே மாட்டோம் என்பது போல புஜாரா மட்டைப்போட்டுவிட்டு வெளியேறினார்.

33 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார். அதற்கு அடுத்த பந்திலேயே ரஹானே கோல்டன் டக் அவுட்டாகி நடையை கட்டினார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய கவாஸ்கர், இந்திய அணிக்குள் புஜாரா மற்றும் ரஹானேவின் இடங்கள் குறித்து பிரச்சினை வழுத்து வருகிறது.

ஆனால் இன்று விழுந்த 2 விக்கெட்களின் மூலம், அவர்கள் இருவரும் தங்களது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வை பாதுகாத்துக்கொள்ள இன்னும் ஒரே ஒரு இன்னிங்ஸ் தான் பாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதாவது 2வது இன்னிங்ஸ் தான் அவர்களின் வாழ்வா சாவா ஆட்டமாக இருக்கிறது. ரஹானே - புஜாரா ஆகியோர் மோசமான ஃபார்ம் காரணமாக முதலில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் சேர்க்கப்படுவதாக இல்லை.

ஆனால் அவர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த ராகுல் டிராவிட், சண்டைப் போட்டு அவர்களை இந்திய அணியுடன் அழைத்துச்சென்றார். ஏதாவது ஒரு இன்னிங்ஸில் இருவரின் ஃபார்ம் சரியாகிவிடாதா என காத்திருந்தார்.

ஆனால் தற்போது டிராவிட்டே மனம் உடைந்து உட்கார்ந்துள்ளார் என தெரிகிறது. இதனால் இனி யாராலும் காப்பாற்ற முடியாது.

அவர்கள் இருவரின் இடத்திற்கு போட்டியாக இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹனுமா விஹாரி என இரண்டு வீரர்கள் காத்துள்ளனர்.

தங்களது ஃபார்மை நிரூபித்தும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என ஸ்ரேயாஸ் ஆதங்கத்தில் உள்ளார்.

ஒருவேளை 3வது டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டால், அதன் பின்னர் புஜாரா, ரகானேவால் அணிக்குள் நுழைவது கடினம்.